Archana Ravichandran : பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
கடந்த ஆண்டு நடைப்பெற்று, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் முடிந்த நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 7. இதில், அர்ச்சனா ரவிச்சந்திரன் டைட்டிலை வென்றிருந்தார்.
விஜே அர்ச்சனா, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய இவர், அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ராஜா ராணி தொடரின் இரண்டாவது சீசனில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார்.
தான் வில்லியாக நடித்ததால் தன் மீது மக்களுக்கு இருந்த நெகடிவ் பிம்பத்தை உடைக்க நினைத்த இவர், பிக்பாஸ் இல்லத்திற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார்.
பிக்பாஸில் இவர் நுழைந்த போது ஆரம்பத்தில் மக்கள் இவரை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு வாங்கி வெளியேறிய விவகாரத்தில், இவர் குரல் கொடுத்ததை அடுத்து இவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. கூடவே, இவர் தனக்கென விளம்பர தூதர்களை வெளியில் வைத்திருந்ததால் இவருக்கு மக்களின் வாக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அர்ச்சனா டைட்டிலை வென்றதற்கு பிறகு, அவர் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா?
அர்ச்சனா, பிக்பாஸிற்குள் நுழைவதற்கு முன்னரே டிமாண்டி காலனி 2 படத்தில் நடித்து விட்டார். தற்போது பல்வேறு கடைத்திறப்பு விழாவிற்கும், ரசிகர்களை சந்திக்கும் விழாக்களுஇலும் கலந்து கொண்டு வருகிறார். இப்போதைக்கு இவர் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.