பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்! முடிவு மாறுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சீசனில் பிரதீப் வித்தியாசமான முறையில் விளையாடி பலரது மனதை வென்று இருந்தார். அவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்நிலையில், பிரதீப் வீட்டில் கெட்டவார்த்தை பேசுவதாக புகார் எழுந்தது. மேலும் வீட்டில் உள்ள மற்ற நபர்களிடம் சண்டை போட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் நடந்த டாஸ்கில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் பின்பு வீட்டில் உள்ள பாதி பேர் பிரதீப்பை வெளியேற்ற முடிவு செய்தனர்.
சனிக்கிழமை நடந்த எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப்க்கு ரேட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினர். இதனால் கமல்ஹாசன் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.
இந்நிலையில், பல பிரபலங்கள் பிரதீப்க்கு ஆதரவாக களமிறக்கி உள்ளனர். கவின், ப்ரியங்கா தேஸ்பாண்டே, சினேகன், பவானி, நிரூப், சனம் ஷெட்டி என பலர் ஆதரவு கொடுத்துள்ளனர்.