BB Tamil Winners: பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Wed, 10 Jan 2024-3:00 pm,

பிக்பாஸ் போட்டியின் முதல் சீசனில் கோப்பையை வென்றவர், ஆரவ். இந்த சீசன்தான் தமிழில் முதல் பிக்பாஸ் போட்டி என்பதால் பலருக்கும் இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதே விளங்காமல் இருந்தது. அது மட்டுமன்றி, ஆரவ்-ஓவியா காதல், ஓவியா தற்கொலை முயற்சி என இந்த சீசன் முழுவதும் சர்ச்சைகள் தொடர்ந்தது. இந்த நிலையில், கடைசியாக ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளர், ரித்விகா. துணை நடிகையாக வலம் வந்த இவருக்கு, இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அதே போன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இவர் கடந்த ஆண்டு யாவரும் வெல்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். 

இருப்பதிலேயே ரசிகர்களை அதிகமாக மகிழ்வித்த பிக்பாஸ் சீசன் என்றால் அது முகேன் ராவ் இருந்த சீசன்தான் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாவது சீசனில் பாடல்கள் பாடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தார், முகேன். இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர். சில படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது ஆல்பங்களில் தனது பாடல்களை ரிலீஸ் செய்து வருகிறார். 

பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர், ஆரி அர்ஜுன். தனியாளாக நின்று ஒட்டுமொத்த பிக்பாஸ்  போட்டியாளர்களையும் எதிர்த்ததற்கு பெயர் போனவர் இவர். ஆரி, பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சில படங்களில் நடித்தாலும், அவை எதுவும் பெரிதாக ஓடவில்லை. இவர், தற்போது தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்சியின் 5வது சீசனின் வெற்றியாளர், ராஜூ. சீரியல் நடிகராக இருந்த இவர், தற்போது பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்து வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வெற்றியாளர், அசீம். இவர், இந்த சீசன் முழுவதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை பேசி சர்ச்சைகளை கிளப்பினாலும், இறுதியில் இவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதற்கு பிறகு அதை பலர் எதிர்த்தனர். இவர் தற்போது எந்த படத்திலும் கமிட் ஆனதாக தகவல்கள் இல்லை. 

பிக்பாஸின் தற்போதைய சீசனான 7வது சீசனில் யாருக்கு கோப்பை கிடைக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மாயா, விஷ்ணு, மணிச்சந்திரா ஆகியோர் 100 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் இல்லத்தில் போட்டியிட்டு வருகின்றனர். இவர்களை தவிர தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் இப்போட்டிக்குள் வைல்டு கார்டு மூலம் நுழைந்தவர்களாக உள்ளனர். இதில், மாயா அல்லது அர்ச்சனாவிற்குதான் வெற்றி கிடைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link