இந்து மதத்தை உலகளவில் பேச வைக்கும் பிரம்மாண்டமான ஹிந்து ஆலயங்கள்!

Sat, 16 Mar 2024-12:15 pm,

இந்து மதத்தில் சமயம் சார்ந்த ஆன்மீக நோக்கங்களுக்காகவும், வழிபாட்டிற்காகவும் கோவில்கள் கட்டப்படுவது பல நூற்றாண்டுகள் பழமையானது. உலக அளவில் பிரம்மாண்டமான கோவில்கள் பல இருந்தாலும், இந்த கோவில்கள் பரப்பளவிலும் பிரபலத்திலும் பிரம்மாண்டமானவை...

கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில், 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது 820,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் அங்கோர் வாட் கோயிலும் ஒன்று

நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயில் 240,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.

631,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. பழம்பெரும் கோவில்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் 106,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தில்லையம்பலம் என்றழைக்கப்படும் இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்திற்கு உரிய கோயில் ஆகும்.  

தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் பிரமாண்டமான லிங்கம் உலக அளவில் பேசப்படுகிறது கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன.  இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது  அண்ணாமலையார் திருக்கோயில்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link