பணம், பதவி, புகழ்.. குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவார்கள்
குரு பகவான்: அறிவு, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி மற்றும் தொழில் விரிவாக்கத்தின் காரணியாக குரு கருதப்படுகிறார். பல நல்ல பலன்களை அள்ளித்தரும் கிரகங்களில் குருவும் முக்கியமான ஒருவர்.
குரு பெயர்ச்சி: குரு பகவான் 2023 இல், மேஷ ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2024 வரை அதில் சஞ்சரிப்பார். குரு பெயர்ச்சிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் மிக அதிக முக்கியத்துவம் உள்ளது
ராசிகளில் தாக்கம்: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம்: மேஷ ராசியில் குருவின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணித் துறையில் அதிக வெற்றிகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு: இந்த காலம் உங்களுக்கு மிக நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கூடும். துறையில் பல சிறந்த வாய்ப்புகள் அமையும். இந்த நேரம் பண விஷயத்தில் நன்றாக இருக்கும். மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புகழும் செல்வமும் பெருகும். இது தவிர, சமயப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் செல்லக்கூடும் வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் படிக்கச் செல்லும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.
குரு வக்ர பெயர்ச்சி: மேஷத்தில் உள்ள குரு பகவான் செப்டம்பர் 4 மாலை 4.58 மணிக்கு, திங்கட்கிழமை மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி ஆகி மீன ராசியில் நுழையவுள்ளார். குரு 118 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார். இதனால் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இது மிக அமோகமான யோகமாக கருதப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.