புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு பொற்காலமாய் ஜொலிக்கும்.... சனி, குரு அருளால் சுபிட்சம் பெருகும்
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார். மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான பெயர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 -இல் மே மாதத்தில் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் 2025 ஆம் ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக இருக்கும்.
2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் குரு வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கலாம். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அனைத்து பணிகளிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்வில் இனிமை இருக்கும். சமூகத்தில் மரியாதை கூடும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழிலில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கும் திருமணம் நடக்கும். குரு அருளால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்: சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த பணப் பிரச்சனைகள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பழைய சச்சரவுகள் தீரும். மூதாதையர் சொத்துக்களில் லாபம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். நீண்ட பயணங்கள் இருக்கும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்.
கும்பம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் நடக்கும். 2025ம் ஆண்டு அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பெரும் லாபம் கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். அரசு பணிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் பண ஆதாயமும் கூடும்.
சனி பகவானின் அருள் பெற தினமும், சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். இவை தவிர ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்பவர்களையும் சனி பகவான் சோதிப்பதில்லை.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வர, குரு சாட்சாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ' என்ற குரு ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.