Blood Thinner Foods: இரத்தத்தை மெலித்து... மாரடைப்பை தடுக்கும் சிறந்த உணவுகள்
உடலை ஆரோக்கியமாக செயல்பட, ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சமநிலையில் இருப்பது அவசியம். இரத்தத்தின் மூலம் தான் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் நமது முழு உடலையும்சென்றடைகிறது. இந்நிலையில் இரத்தத்தை மெலிதாக்க உதவும் சிறந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய்: வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் மெலியும். இரத்தம் கெட்டியாகாமல் தடுக்கும் சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளன.
இஞ்சி: இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடம் இரத்தத்தை மெலித்து, மாரடைப்பு ஏற்படுவதௌ தடுக்கிறது.
பூண்டு: நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை ஊக்குவிக்கும் பூண்டு, ரத்தத்தை மெலித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாதுமை பருப்பு- அக்ரூட் என்னும் வதுமை பருப்பில் ஏராளமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ள நிலையில், உடலில் இரத்தத்தை மெலிக்க உதவுகிறது. இது தவிர, வைட்டமின் ஈ அக்ரூட் பருப்பில் உள்ளது, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அவகேடோ - வெண்ணெய் பழத்தில் நல்ல அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது உடலில் உள்ள இரத்தத்தை மெலிதாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பெர்ரி: பெர்ரி வகை பழங்களில் சாலிசிலேட் காணப்படுகிறது. இது இரத்தத்தை மெலிக்க உதவும் முக்கிய சத்து. நீங்கள் அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, செர்ரிகளை சாப்பிட இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.