இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை நினைவுபடுத்தும் இங்கிலாந்து ராணியின் இறுதிப்பயணம்

Tue, 20 Sep 2022-11:04 am,

இளவரசியாக மறைந்த டயானா, என்றென்றும் முடி சூடா மகாராணியாக மக்களின் மனதில் இருப்பதாக டயானாவின் மறைவின்போது மக்கள் தெரிவித்தனர்.

மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், இளவரசி டயானாவின் இறுதி வழியனுப்பு நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. 

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். 

ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார் இளவரசி டயானா

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இளவரசி டயானா சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் அவருக்கு அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்ற சர்ச்சைகளும் எழுந்தன

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்ததில் முக்கிய பங்கு இளவரசி டயானாவின் மரணத்திற்கு உண்டு

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. 

விசாரணையின் முடிவில் மரணம் டயானாவின் வாகன ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியதால் ஏற்பட்டதாக கூறப்பட்டது.  

பப்பராத்சிகளின் செய்கைகளினால் டயானாவின் மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்புக் கூறப்பட்டது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link