பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சந்தாதாரர்களை சேர்க்க மற்றும் பிராட்பேண்ட் பிரிவில் மீண்டும் முதல் இடத்தை அடைய கடுமையாக போராடி வருகிறது. அதனொரு பகுதியாக, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் ஒரு சிறப்பு தள்ளுபடி சலுகையை இன்னும் 1 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.
தனது பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31, 2024 இல் முடிவடைய வேண்டிய இந்த சலுகை இப்போது 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாரத் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 என்கிற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும் காப்பர் கனெக்ஷனை பயன்படுத்துவதற்கான ரூ.250 என்கிற நிறுவல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இவ்விரு சலுகைகளுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து புதிய பிராட்பேண்ட் இணைப்பை தேடும் நபர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கூட தத்தம் பிராட்பேண்ட் இணைப்புகளை நிறுவுவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. ஆனால் அதை பெற வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டத்தை (3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் அல்லது 1 ஆண்டு) தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களானது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் போட்டி போடும் அளவிலான விலை நிர்ணயங்களை பெற்றுள்ளன. மேலும் பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஓடிடி நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.