பிஎஸ்என்எல் இந்த பிளானிலும் இனி 84 நாட்கள் வேலிடிட்டி! 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கலாம்

Thu, 22 Feb 2024-2:12 pm,

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இரண்டு மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பற்றி பார்த்து கொண்டிருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். 

 

இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் டேட்டாவுக்கும் பஞ்சம் இருக்காது. மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட இதில் பல மடங்கு அதிக நன்மை வழங்கப்படுகிறது. 

 

BSNL -ன் 599 ரூபாய் திட்டம் அன்லிமிடெட் வாயிஸ் காலிங் நன்மையுடன் வருகிறது. இதில் தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB டேட்டா வழங்குகிறது. இதன் இன்டர்நெட் ஸ்பீட் குறைந்தால் 40 Kbps ஆக FUP லிமிட் குறையும். இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக Zing மற்றும் PRBTஉடன் Astrocell மற்றும் GameOn சேவைகளும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்.

 

BSNL -ன் ரூ 769 ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நனமைகளை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது.

 

ஆனால் இதில் கூடுதல் நன்மையாக பயனர்களுக்கு BSNL Tunes, Hardy Mobile Games service, Challenges Arena Mobile Gaming, Lystn music service, Lokdhun, Zing மற்றும் பல கேமிங் சேவைகளும் வழங்கப்படுகிறது.

 

இரண்டு திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு டன் டேட்டாவை வழங்கினாலும் ஏர்டெல், ஜியோ போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஈடு போட்டி போட முடியவில்லை.

 

ஏன் என்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. அதேநேரத்தில் BSNLன் நெட்வொர்க்குகள் PAN-India 4G-ல் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link