Budget 2024... ஹைபிரிட் கார்கள் விலை அதிரடியாய் குறைய வாய்ப்பு...!

Sun, 21 Jul 2024-12:31 pm,

Budget 2024 & Expectations in Automobile Industry:  தற்போது இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை கொண்ட நாடு என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள, மத்திய அரசு தரப்பில் இருந்து சில சலுகைகள் வரலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது ஆட்டோமொபைல் துறை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டைக் ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு பல விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன.

மின்சார வாகனங்களை உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஐந்து ஆண்டுகளில் ரூ.11,500 கோடி  மானியம் ஒதுக்கியுள்ள நிலையில்,தற்போது இந்த மானியங்களின் அளவு மற்றும் கால அளவு இரண்டையும் அரசு மாற்றாமல் நீடிக்கும் என ஆட்டோமொபைல் துறை எதிர்பார்க்கிறது. டாடா மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட EV துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் இதனால் பயன்பெறும்.

 

மற்றொரு முக்கியமான எதிர்பார்ப்பு ஹைபிரிட் வாகனங்களுக்கான வரிச் சலுகைகள். தற்போது ஹைபிரிட் வாகனங்களுக்கு விதிக்கப்படும் 43% வரி  விதிக்கப்படும் நிலையில், இது 15% என்ற அளவில் குறைய வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்கு 48% வரை வரி விதிக்கப்படும் நிலையில், இந்த வரி குறைப்பின் மூலம் ஹைபிரிட் வாகனங்களில் விலை பெட்ரோல் வாகனங்களின் விலையை விட வெகுவாக குறைந்துவிடும்.

உத்தரபிரதேச மாநிலம் அண்மையில் ஹைபிரிட் வாகனங்களுக்கான பதிவு வரியை முற்றிலுமாக ரத்து செய்த நிலையில், இந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் இந்த சலுகையை அளிப்பது குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு  ஆட்டோமொபைல் துறையினரின் மத்தியில் மட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. ஹைபிரிட் வாகனங்களை டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் தான் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய அரசு இதில் ஆர்வமும் காட்டி வருகிறது. ஆனால், எதிர் கட்சியினர் ஆளும் மாநிலங்கள் எதிர்த்து வருகின்றனர. இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் எரிபொருள் விலையை குறையும். இதுவாடிக்கையாளரின் செல்வை பெருமளவு குறைக்கும். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சியைக் காணும்.

 

பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பாப்பும் உள்ளது. பழைய வாகனங்களால் சுற்று சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுவதை தடுக்க இது அவசியம் என SIAM (இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம்) கருதுகிறது. குறிப்ப்பாக வணிக வாகனங்களுக்கு இந்த நடவடிக்கை அவசியம்  என எண்ணுகின்றனர் வல்லுநர்கள். மேலும் இதனால், ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சி காணும்.

மத்திய பட்ஜெட் 2024 வாகனத் தயாரிப்பு தொழில் துறையினர் நீண்ட காலம் சந்தித்து வடும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி மற்றும் புதுமைகளைத் ஊக்குவிக்கும் வகையிலும் அறிவிப்புகள் வெளியாகும் என ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது. பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியானால், ஆட்டோமொபைல் துறை பெரும் வளர்ச்சியைக் காணும் என்கின்றனர் வல்லுநர்கள்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் முழுமையான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க தளங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link