பட்ஜெட் விலையில் பக்காவான டேப்லெட் - சிறப்பம்சங்கள் இதோ!

Tue, 07 Nov 2023-7:54 pm,

Oukitel OT5 டேப்லெட்டின் பிரமாண்ட 12-இன்ச் டிஸ்ப்ளே இதை ஒரு அற்புதமான டேப்லெட்டாக உருமாற்றுகிறது. அதன் தெளிவான 2K ரெஸ்சோல்யூஷன் மற்றும் ஈர்க்கக்கூடிய 86% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கேம்கள் மற்றும் செயலிகளின் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 

 

இந்த பெரிய, துடிப்பான திரை அழகானது மட்டுமல்ல இது பயனர் அனுபவத்தையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக இது தீங்கு விளைவிக்கும் புறஊதா ஒளியில் இருந்து பயனர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

இது நீண்ட கால பயன்பாட்டிற்கு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு குறிப்பாக குறைந்த ஒளி சூழலில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

 

பேட்டரி: இதன் மிகப்பெரிய 11,000mAh பேட்டரி நாள் முழுவதும் இதனை பயன்படுத்தலாம். இந்த பவர்ஹவுஸ் பேட்டரி 1,200 மணிநேர காத்திருப்பு நேரத்தை வழங்குகிறது.

 

ஸ்டோரேஜ்: இதன் 12 GB RAM, அதை ஒரு சக்திவாய்ந்த பல்பணி டேப்லெட்டாக மாற்றுகிறது. இந்த டேப்லெட்டில் 256 GB   இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 TB வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும். இந்த டேப்லெட் மூலம், உங்கள் அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் எவ்வித கவலையும் இன்றி சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

 

கேமரா: இந்த டேப்லெட்டில் 16MP பிரதான பின்புற கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா தெளிவான வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்க உதவும்.

 

விலை: இந்த டேப்லெட்டின் விலை வெறும் 199.99 அமெரிக்க டாலர்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 17 ஆயிரம்தான். நவம்பர் 11 முதல் 17 வரையிலான பிரீமியர் விற்பனையின் போது, முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு OUKITEL அதிகாரப்பூர்வ ஸ்டோரில் இருந்து $20 கூப்பன் வழங்கப்படுகிறது. இதன் விலை அப்போது ரூ.14,986 ஆக குறையும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link