பேசியே காரியம் சாதித்துவந்த இந்த ராசிகளுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு கன்னியில் புதன்!
புதன் பகவான் செல்வம், தொழில் மற்றும் வாக்கு சாதுரியத்திற்குக் காரகரர். இவர், 23 செப்டம்பர் முதல் 10 அக்டோபர் வரை புதன் கன்னி ராசியில் இருக்கிறார்.
புதனின் சுப காரகத்துவம் இருந்து புதாதித்ய யோகம் இருந்தாலும், இந்த நேரத்தில், 4 ராசிக்காரர்கள் சிரமப்படுவார்கள். எனவே, அக்டோபர் 10 வரை கவனமாக இருக்க வேண்டும்
பொதுவாக, கன்னி புதனின் சொந்த ராசியாக இருப்பதால், புதன் கன்னியில் இருக்கும் போது சாதகமான பலன்களையே கொடுப்பார் என்றாலும், 4 ராசிகளுக்கு கன்னி புதன் மோசமான பலன்களைக் கொடுப்பார்
மேஷ ராசிக்காரர்களுக்கு கன்னியில் புதன் சஞ்சாரம் பல வகைகளில் கெடுதல்களை ஏற்படுத்தும். சுறுசுறுப்பாக இருக்கும் உங்கள் வேலையை கெடுப்பதற்காகவே எதிரிகள் முளைத்து வருவார்கள். கணபதியை வழிபட்டால் நன்மை கிடைக்கும்
புதனின் கன்னி ராசி சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் வார்த்தைகளில் கசப்பை ஏற்படுத்தும். குறைவாக பேசுவதும், சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது. தோல் பிரச்சினைகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்
துலாம் ராசிக்காரர்களும் அக்டோபர் 10 வரை கவனமாக இருக்க வேண்டும். நிறைய பணம் செலவாகும். கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அலுவலகத்தில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்
புதனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருக்கும் நிலையில், மோதல்கள் மூளும் சூழ்நிலை வரலாம், எனவே கவனமாக இருங்கள். குடும்பப் பொறுப்புகள் சுமையாகத் தோன்றும் ஆனால், அது உண்மையல்ல என்பதை உணர்ந்தால் போதும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது