தந்தேரஸ் பண்டிகையில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம்! தீபாவளியை குஷியாக கொண்டாடும் ராசிகள்!

Sat, 26 Oct 2024-11:08 am,

விருச்சிக ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் அக்டோபர் 29 அன்று நடைபெறும் புதன் பெயர்ச்சீயால் விருச்சிகத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது...

புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் மீன ராசிக்காரர்களின் நிதி நிலையை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். அன்னை லட்சுமியின் அருளால் தொட்டதெல்லாம் துலங்கும்

பணவரவை அதிகரிக்கும் லக்ஷ்மி நாராயண யோகம், தொழில் மற்றும் வியாபாரத்தை சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்! 

எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடையும் மகர ராசிக்காரர்கள், எந்த வேலை எடுத்தாலும் அதில் முதலிடத்தில் இருப்பார்கள். எதிர்பாராத வெற்றிகளும் சாத்தியமாகும். முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குதூகலம் கொப்பளிக்கும், ஆசைப்பட்ட விஷயங்களை இந்த யோகம் நிறைவேற்றித் தரும்

விருச்சிக ராசியில் புதனும் சுக்கிரனும் ஒன்றிணைவதால் ஏற்படும் இந்த யோகத்தின் பலனை அதிகம் அனுபவிக்கப்போவது விருச்சிக ராசியினர் தான்

அழியாத செல்வத்தைத் தந்து மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் யோகமாக லக்ஷ்மி நாராயண யோகம் இருக்கும்

கன்னி ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் சுபகாலம் தொடங்கும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுக்கிர பகவானின் அருளாசி, சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், புதனோடு சேர்ந்தால் கூடுதல் பலன்களைக் கொடுப்பார்

புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகவிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும், சுப செலவுகளும் ஏற்படலாம்

மிதுன ராசியினருக்கு பொற்காலம் தொடங்கிவிட்டது. கொடுத்த பணம் வராதோ என்ற கவலையுடன் இருந்தவர்கள், இனிமேல் ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு பணம் வந்து சேரும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பண ஆதாயத்தைக் கொடுக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும்

மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் நல்ல செய்திகளைத் தரும். மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். சொத்து மற்றும் வாகனங்களால் நல்ல அனுபவம் கிடைக்கும் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link