வக்ரமடையும் புதன்... இந்த ராசிகளுக்கு பணவிரயம்... பலன்களும் பரிகாரங்களும்

Fri, 29 Mar 2024-5:03 pm,

புதன் வக்ர பெயர்ச்சி: புத்திசாலித்தனம் மற்றும் பேச்சாற்றல், வெற்றி, செல்வம் ஆகியவற்றை கொடுக்கும் ஞானக் கடவுளான புதன், மேஷ ராசியில், ​​ஏப்ரல் 2, 2024 அன்று வக்ர நிலையை அடைகிறார்.

புதன் வக்ர நிலையில் இருப்பதால், அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: பண இழப்பு ஏற்படலாம். எதிர்பாராத சில பிரச்சனைகள் உருவாகலாம். அலட்சியத்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டும். பணியிடத்திலும், வீட்டிலும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்த வேலையையும் செய்வதற்கு முன்பு பல முறை கவனமாக சிந்திக்க வேண்டும்.

ரிஷபம்: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மிகுந்த பொறுமையுடன் உழைக்க வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். நிதி நிலைமை சற்று பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

கடகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். பண இழப்பு ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும், அதற்கான பாராட்டு கிடைக்காது. மனதில் ஏமாற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்ததை விட சவால்களும் அதிகமாக இருக்கும். பண பரிவர்த்தனை விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜோதிட பரிகாரங்கள்: ஞானத்தை அள்ளித தரும் புதனின் அனுகிரகம் முழுவதுமாக கிடைக்கவும், கெடுபலன்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அவருக்கு பிடித்த நிறமான பச்சை நிறத்தை அதிகம் பயன்படுத்துவது பலன் தரும். புதன்கிழமைகளில், சிறிதளவு பச்சை பயிரை பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வழிபடுதலும் பலனைக் கொடுக்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link