கார் வாங்கணுமா? இப்ப வாங்கினா டாடா மோட்டார்ஸ் வழங்கும் அதிரடி தள்ளுபடி கிடைக்கும்!!
டாடா மோட்டார்ஸ் , ஹாரியர் எஸ்யூவியின் 2021 மாடலில் ரூ. 60,000 வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உட்பட மொத்தம் ரூ.60,000 வரை பலன்களை வழங்கியுள்ளது. 2022 டாடா ஹாரியரில் ரூ. 40,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் போனஸ் கிடைக்கிறது. இதைத் தவிர இரண்டு ஹாரியர் கார்களுக்கு ரூ.25,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும்.
Tata Safari இல், வாடிக்கையாளர்கள் ரொக்க தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸில் 60,000 ரூபாய் அளவிலான நன்மைகளைப் பெற்றுள்ளனர். ஹாரியரின் வரிசையில், இந்த தள்ளுபடி SUVயின் 2021 மாடலில் கிடைக்கிறது. 2022 மாடலில், நிறுவனம் ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்கியுள்ளது.
டாடாவின் காம்பாக்ட் செடான் டைகோரின் 2021 மாடலுக்கு ரூ. 25,000 வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. காரின் 2022 மாடலில் நிறுவனம் ரூ. 20,000 வரையிலான ரொக்க தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்கியுள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் தனித்தனியாக ரூ.10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
டாடா நிறுவனம் 2021 மாடல் டியாகோவில் மொத்தம் ரூ.25,000 மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. டியாகோவின் 2022 மாடலில் ரூ.20,000 வரை பலன்கள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் தவிர, நிறுவனம் காரில் 5,000 ரூபாய் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பமான காரான காம்பாக்ட் எஸ்யூவி நெக்ஸானின் 2021 மாடலுக்கு டாடா மோட்டார்ஸ் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கியுள்ளது. இது டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இது தவிர, எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியும், அதன் டீசல் மாடலுக்கு ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கிறது.
Tata Altroz பிரீமியம் ஹேட்ச்பேக்கின் 2022 மாடலில் 10,000 ரூபாய் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி காரின் டீசல் மாடலில் கிடைக்கிறது, பெட்ரோல் மாடலில் ரூ.7,500-க்கான கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கிறது.