மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது, 3% அகவிலைப்படி அதிகரிப்புக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்து விட்டது. இதன் பிறகு, மொத்த அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை, அகவிலைப்படி 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜூலை 2021 முதல் அரசாங்கம் அதை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது 2021 ஜூன் மாதத்தில் அகவிலைப்படி மேலும் 3 சதவிகிதம் அதிகரித்ததால், அது (17+4+3+4+3) 31 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .50,000 என்றால், அவருக்கு ரூ .15,500 டிஏ கிடைக்கும்.
ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையின் போது, 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி அரியர் தொகையைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகின்றது. இப்போது நிலுவையில் உள்ள 18 மாத அரியர் தொகை விவகாரம் பிரதமர் நரேந்திர மோடியை எட்டியுள்ளது.
இந்த தீபாவளியில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருக்கும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் நல்ல செய்தியைப் பெறக்கூடும். தீபாவளிக்கு முன், EPFO, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பம்பர் பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.