தீபாவளிக்கு கார் வாங்குகிறீர்களா? முக்கிய காரணிகளைச் சரிபார்க்கவும்

Sat, 30 Oct 2021-9:00 am,

கார் வாங்குவதற்கான முதல் படி பட்ஜெட் ஆகும். நான்கு சக்கர வாகனத்தை வாங்கும் போது வாங்கக்கூடிய அதிகபட்ச விலை என்ன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

(Pixabay image for representational purposes only)

கார் வாங்குவது என்பது  வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும், அது நமது விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் ரிஉக்க வேண்டும் என்பதால், காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்  தோற்றம் மிகவும் முக்கியமானது   (Pixabay image for representational purposes only)

பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கார் வாங்குவதை பார்க்க வேண்டும். காரின் விலையைத் தவிர, அது கொடுக்கும் மைலேஜ் எவ்வளவு என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், இப்போது தினசரி மாறும் எரிபொருள் விலையானது நமது மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், மைலேஜ் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாகும்.

(Pixabay image for representational purposes only)

கார் வாங்கும் போது, அதில் அமரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை கவனத்தில்  கொள்ள வேண்டும். அது பொதுவாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

  (Pixabay image for representational purposes only)

இஞ்சின், காரின்  மிகவும் முக்கியமான பாகமாகும். கார் வாங்கும் இறுதி முடிவை எடுப்பதற்கு முன், இன்ஜின் விவரங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.

(Pixabay image for representational purposes only)

உத்தரவாதக் காலத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நீண்ட வாரண்டி காலத்தை வழங்கும் நிறுவனங்களையே பொதுவாக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.   (Pixabay image for representational purposes only)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link