இந்தியாவில் ரூ.4 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் கார்கள்!

Wed, 07 Sep 2022-1:09 pm,

Renault Kwid: 

இந்தியாவில் Renault Kwid காரை ரூ. 3.05 லட்சம் முதல் ரூ.5.36 லட்சத்திற்குள் வாங்க முடியும், இது இரண்டு பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகிறது.  இதில் 8 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

 

Maruti Alto 800 :

இந்தியாவில் Maruti Alto 800 காரை ரூ.3.28 லட்சம் முதல் ரூ.4.56 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  இதில் 0.8லி 3சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, மேலும் 7 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.

 

Maruti Suzuki S-Presso :

இந்தியாவில் Maruti Suzuki S-Presso காரை ரூ. 4.05 லட்சம் முதல் ரூ.4.93 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  இதில் 1.0லி பெட்ரோல் இன்ஜின் உள்ளது, மேலும் 7 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார், சீட்பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளது.

 

Datsun redi-Go :

இந்தியாவில் Datsun redi-Go காரை ரூ.3.12 லட்சம் முதல் ரூ.4.81 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  0.8 மற்றும் 1.0லி பெட்ரோல் இஞ்சினை கொண்டுள்ளது, மேலும் இந்த கார் மாருதி ஆல்டோ ட்வின்ஸ் மற்றும் ரெனால்டு க்விட் போன்ற கார்களுக்கு போட்டியாக சந்தையில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link