சமைத்தால் முழு ஊட்டசத்து கிடைக்காது... ‘இந்த’ காய்கறிகளை அப்படியே சாப்பிடுங்க..!
ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மையை தரும். எந்தெந்த காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடுவதால், அதிக நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய சமையலில் தக்காளி இன்றியமையாதது. ஆனால் நீங்கள் உண்மையில் தக்காளியின் சத்துக்களை முழுமையாக பெற விரும்பினால், அதை சாலட் வடிவில் சாப்பிடுவது சிறந்தது
பீட்ரூட் இரும்புச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதனை பச்சையாக சாப்பிடும் போது அதிக நன்மை பயக்கும். பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ப்ரோக்கோலி ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இதனை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவது எப்போதும் சிறந்தது.
ப்ரோக்கோலியைப் போலவே காலிஃபிளவரையும் வேக வைக்கத் தேவையில்லை. பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்
வெங்காயம் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கும்.