கடவுளை நேரடியாக அடைவதற்கான நேரடி வழி! இது குறுக்குவழி அல்ல... காயத்ரி மந்திரம்...
காயத்ரி மந்திரத்தின் மகிமைகளை வார்த்தைகளுக்கும் அடக்கிவிட முடியாது. மந்த்ர ராஜம் என்றும், வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி மந்திரத்தின் சிறப்பாகும்...
மந்திரங்களின் தலையாய மந்திரமான காயத்ரி மந்திரம் ஜபித்தால் என்ன பலன்கள் ஏற்படும்?
‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’ என்று சொல்வதுண்டு... அதாவது தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி மந்திரம் என்பது இந்த வார்த்தையின் பொருளாகும்.
ஓம் பூர்புவஸ் ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி... தியோ யோன: ப்ரசோதயாத்!
காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?
ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்
அறிவையும் ஆற்றலையும் தரும் காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது.
சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி மந்திர ஜபம்
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது சுற்றுச்சூழலில் நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது. மேலும் எதிர்மறை ஆற்றலை அகற்றி வாழ்க்கை வளம் பெற காயத்ரி மந்திரம் உதவுகிறது.
விசுவாமித்திரரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாரமாக விளங்குகிறது. அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி காயத்ரி மந்திரங்கள் உண்டு