அட்டகாசமான வட்டி விகிதத்தில் கடன் பெற வேண்டுமா? வங்கிகளின் லிஸ்ட் இதோ
வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (Rate Of Interest) 6.70% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் செயலாக்க கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஊதியம் பெறாத (Non Salaried) வாடிக்கையாளர்களுக்கு வட்டி பிரீமியத்தில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
தனியார் வங்கியான எச்டிஎப்சி-யும் இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன்களை மலிவாக வழங்க முடிவு செய்துள்ளது. வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் சில தள்ளுபடியும் வழங்கப்படும்.
அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 6.85%-8.00% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும். இதனுடன் 22 முதல் 25 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ-யில் 20 ஆயிரம் செயலாக்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதம் 6.90% -8.40% ஆக உள்ளது. 23 முதல் 25 ஆயிரம் இஎம்ஐ மீது அதிகபட்சமாக ரூ .10,000 செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
பேங்க் ஆஃப் பரோடாவின் வட்டி விகிதம் 6.75%-8.60% ஆகும். இந்த வங்கியில் 22 முதல் 26 ஆயிரம் வரையிலான தொகையின் இஎம்ஐ-யில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.