மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ

Sun, 06 Oct 2024-3:10 pm,

த்வாஜ் அணிவகுப்பு: நான்கு சேடக் ஹெலிகாப்டர்கள் தலைகீழான 'Y' அமைப்பில் அணிவகுத்து சென்று, தேசிய கொடியையும், இந்திய விமானப்படையின் கொடியையும் பறக்கவிட்ட புகைப்படங்களை இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

கார்த்திகேயா அணிவகுப்பு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று தேஜாஸ் விமானங்கள் 'Vic' வடிவத்தில் அணிவகுத்து சென்ற புகைப்படங்கள் இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

 

 

சங்கம் அணிவகுப்பு: மூன்று இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (LCS) 'பிரசந்தா' ஒரு 'Vic' அணிவகுப்பில் பறந்து சென்ற புகைப்படங்கள் இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

மகாபலி மற்றும் சூர்யகிரண் அணிவகுப்பு: C-17 விமானம் மற்றும் சூர்ய கிரண் விமான சாகசக் குழு (SKAT) மெரினா கடற்கரையில் அணிவகுத்து சென்ற புகைப்படங்கள் இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

தனுஷ் அணிவகுப்பு:  P-8I விமானம் & இரண்டு ரஃபேல் 'Vic' வடிவத்தில் அணிவகுத்து பறக்கும் புகைப்படங்கள் இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

மெரினா அணிவகுப்பு: மூன்று Su-30 MKI ‘Vic’ வடிவத்தில் அணிவகுத்து பறக்கும் புகைப்படங்கள் இதோ... (நன்றி: Indian Air Force/X)

 

இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணியளவில் ஆரம்பித்த நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் நிறைவடைந்தது. மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்து பொது போக்குவரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. நகர் முழுவதும் காலை 9 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான வெயிலுக்கு மத்தியில் (32 டிகிரி செல்சியஸ்) மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 பேர் கூடியதாகவும், மெரினா கடற்கரை சாலைகள், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட அருகாமை இடங்களில் சுமார் 5 லட்சம் பேர் கூடியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், 10 லட்ச மக்கள் நேரில் கண்டு கழித்து விமான சாகச நிகழ்ச்சி சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link