Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?

Mon, 14 Oct 2024-9:46 am,

தமிழகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  ஆகிய 4 மாவட்டங்களுக்கு வரும் 16ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதாலும், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்பதாலும் இந்த மழை அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. 

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 9445551913 உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? 

அக்டோபர் 14ஆம் தேதியான இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது, மோசமான வானிலையை குறிக்கிறது.  இந்த அறிவிப்பு வெளியானால், கனமழை ஏற்படலாம். சுமார் 11.5மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படையலாம். 

அக்டோபர் 15ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அலர்ட் வெளியாகும் நாளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் 204.4 மிமீ வரை மழை பெய்யலாம். 

அக்டோபர் 17ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் அதி கனமழை பெய்யலாம். 204.4 மிமீ மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link