சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும் - ஏன் தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super KIngs) அடுத்த சீசனில் எப்படி வரப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதுதான் பலரின் முதன்மையான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, தூபே, தோனி, பதிரானா உள்ளிட்டோர் மீண்டும் அடுத்த சீசனுக்கு (IPL 2025) தக்கவைக்கப்படலாம். ரச்சின் ரவீந்திரா அல்லது டெவான் கான்வே ஆகியோர் ஏலத்தின் மூலம் மீண்டும் தக்கவைக்கப்படலாம்.
இதனால், சிஎஸ்கேவின் (CSK) மிஸ்டரி ஸ்பின்னர் தீக்ஷனா, ஆல்-ரவுண்டர் மொயின் அலி, மிட்செல் சான்ட்னர் உள்ளிட்டோரை தக்கவைப்பது கடினம்தான்.
எனவே, சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தனது சுழற்பந்துவீச்சு படையை பலப்படுத்த ஒரு வெளிநாட்டு ஸ்பின்னரை நிச்சயம் தேடும். ஜடேஜா ஒருபக்கம் இருப்பதால் மறுமுனையில் தாக்குதலுக்கு பிரதான வெளிநாட்டு ஸ்பின்னர்.
அந்த வகையில், இலங்கை வீரரான கமிந்து மென்டிஸை சிஎஸ்கே அணி இந்த மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) நிசச்யம் எடுக்கும் என கூறப்படுகிறது. அதற்கு சில காரணங்களும் உள்ளன.
கமிந்து மென்டிஸ் (Kamindu Mendis) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சுழற்பந்துவீச்சிலும் மிரட்டுவதால் சிஎஸ்கேவுக்கு 8ஆவது பேட்டர் பிரச்னை இருக்காது.
இலங்கை அணியின் பதிரானாவை போல் இவரையும் சிஎஸ்கே உலகத்தரத்தில் வளர்த்தெடுக்கும் வாய்ப்புள்ளது. இலங்கை வீரர்கள் மேல் சிஎஸ்கே எப்போதுமே அதிக கவனம் செலுத்தும். எனவே, சிஎஸ்கேவில் பதிரானா, கமிந்து மென்டிஸ் ஆகியோர் பந்துவீசினால் மிடில் ஓவரிலும், டெத் ஓவரிலும் ரன்கள் கசிவது பெரிதும் தடுக்கப்படும்.
கமிந்து மென்டிஸின் ஸ்பெஷாலிட்டியே அவர் வலது, இடது என இரண்டு கையிலும் பந்துவீசும் திறன்கொண்டவர் என்பதுதான். மிஸ்டிரி ஸ்பின்னருக்கு சிஎஸ்கே முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் கமிந்து மென்டிஸை கோடிகளை கொட்டியாவது சிஎஸ்கே தூக்க நினைக்கும்.