சென்னை : நாளை விமான சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து மாற்றம் - பார்க்கிங் விவரம்

Sat, 05 Oct 2024-10:09 am,

மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி 2024 கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

 

பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு.

 

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் சாலை - காந்தி மண்டபம் வழியாக அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

பாரிஸில் இருந்து காமராஜர் சாலை வழியாக திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை. மாறாக, அண்ணாசாலை - தேனாம்பேட்டை  - காந்தி மண்டபம் வழியாக திருவான்மியூர் செல்லலாம். 

MTC பேருந்துகள் அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

 

இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி கூடுதலாக 72 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link