வைரலாகும் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம்! யார் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்தார். இவரது சிறுவயது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராஷ்மிகாவுக்கும் கன்னட பட இயக்குநரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால், சில காரணங்களினால் இவர்களின் திருமணம் தடைப்பட்டு போனது. இதையடுத்து, ராஷ்மிகா தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடிக்க வந்துவிட்டார்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காமரேட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. ப்ளாக் பஸ்டர் அடித்த இந்த படங்களில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கீதா கோவிந்தம் படத்திலிடம் பெற்றிருந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடலில் இவர் புடவையை சரிசெய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியை, பல இளம் பெண்கள் புடவை கட்டி சரிசெய்து அப்போது பிரபலமாக இருந்த டிக்டாக் தளத்தில் வெளியிட்டு வந்தனர். இதனால், ராஷ்மிகா இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதினை தேடி கொடுத்துள்ள புஷ்பா படத்தில் ‘ஸ்ரீவல்லி’ எனும் கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இதிலும் ராஷ்மிகாதான் கதாநாயகியாக நடிக்கிறார்.
2021ஆம் ஆண்டு வெளியான சுல்தான் படம் மூலம் ராஷ்மிகா தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவர், கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, தமிழில் நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவிற்கு கிடைத்தது. ஆனால் இந்த படத்தை அடுத்து ராஷ்மிகா வேறு எந்த தமிழ் படங்களிலும் கமிட் ஆகவில்லை. இதற்கு, தமிழ் ரசிகர்கள் இவரை ட்ரோல் செய்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இவருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் ஒன்று திரண்டனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.