மாலையும் கழுத்துமாக நிற்கும் சந்தானம்-ஆர்யா! எந்த படத்திற்காக தெரியுமா?
கோலிவுட்டின் பிரபலமான காமெடி கூட்டணி, சந்தானம்-ஆர்யா. ஒரு கல்லூரியின் கதை படத்தில் ஒன்றாக நடித்த இவர்கள், பின்னர் தொடர்ச்சியாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, சேட்டை, சிவா மனசுல சக்தி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்பட பல படங்களில் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் “ஊர்ல 10-15 ஃப்ரெண்டு வச்சிருக்கவன்லாம் சந்தோசமா இருக்கான்..ஒரே ஒரு ஃப்ரெண்ட வெச்சிட்டு நான் பட்ற அவஸ்த இருகே..” என்ற டைலாக் எல்லா காலத்திலும் ட்ரெண்ட்தான்.
ஆர்யாவும் சந்தானமும் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்ததால் இவர்கள் திரைக்கு பின்னாலும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், தான் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என சந்தானம் கூறிவிட, அதன் பிறகு அவர் காமெடியனாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை.
ஆர்யாவும் சந்தானமும் இப்போது ஒரு புது படத்தில் நடிப்பதற்காக கைக்கோர்த்திருக்கின்றனர். அது என்ன படம் தெரியுமா?
சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடியாக கடந்த ஆண்டு வெளியான படம் டிடி ரிட்டர்ன்ஸ். இந்த படத்தில் இரண்டாம் பாகம்தான் அது.
இதில், ஆர்யா இரண்டாவது ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கியதை தொடர்ந்து, இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.