வருமான வரி தாக்கல் செய்யும் போது ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!

Sun, 28 May 2023-3:35 pm,

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். இதற்கு முன் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

 

ஐடிஆரில் உங்கள் வருமானத்தின் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டியது அவசியம். இதைச் செய்யாவிட்டால், உங்கள் ஐடிஆர் படிவம் நிராகரிக்கப்படலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறுகளை தெரிந்து கொண்டால், அந்த தவறுகள் செய்யாமல் சரியான முறையில் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். மொத்தம் ஏழு வகையான ஐடிஆர் படிவங்கள் உள்ளன, அதில் உங்கள் வகை வருமானத்திற்கான படிவத்தைத் தேர்ந்தெடுத்து நிரப்ப வேண்டும்.

நீங்கள் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். வரி விலக்கு இல்லாவிட்டாலும், பங்குச் சந்தையில் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, அரசின் திட்டங்கள், சம்பளம் மற்றும் இதர தகவல்களை அளிக்க வேண்டும். 

உங்கள் சொத்துக்கள் முழுவதையும் வெளியிடாமல் இருப்பதும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஐடிஆர் நிரப்பும் போது அசையும் மற்றும் அசையா சொத்துகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பிரிவு 80C இன் கீழ், நீங்கள் ஏதேனும் விலக்கு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது பற்றிய தகவலை ITR இல் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link