நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபட இதை பின்பற்றுங்கள்
ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது இளம் வயதிலேயே ஏற்படும் நரை முடியை தடுக்க உதவுகிறது.
கறிவேப்பிலை: இதில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதனால்தான் இந்த கறிவேப்பிலையை பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தினால் வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக மாற ஆரம்பிக்கிறது.
பச்சை இலைக் காய்கறிகள்: இவை ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். முடி நரைப்பதைத் தடுக்கலாம். இதற்கு கீரை, கொத்தமல்லி தழை, வெந்தய இலைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் : நம் உடலில் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், சிறு வயதிலேயே முடி நரைத்துவிடும். இதற்கு காளான், உருளைக்கிழங்கு, வால்நட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ப்ளூபெர்ரி: வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாற, துத்தநாகம், அயோடின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்த ப்ளூபெர்ரிகளை சாப்பிடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)