கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள் - ஆரோக்கியம் நிறைந்தது!
சரும பாதுகாப்பு: ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால் கஞ்சி உங்களின் சருமத்தின் பொலிவை அதிகரிக்கும், பருக்கள் வராமல் தவிர்க்கும்.
சர்க்கரை அளவை சீராக்கும்: இதில் சற்று வினீகர் மற்றும் மசாலா பொருள்களை சேர்ப்பதன் மூலம் அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இது சர்க்கரை நோயாளிக்கும் நன்மை அளிக்கும்.
உடல் எடை குறைக்க உதவும்: இது நொறுக்க தீனிகளை திண்ணும் உணர்வை கட்டுப்படுத்தும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது.
குடல் ஆரோக்கியமாகும்: இதில் நுண்ணுயிர்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலின் ஆரோக்கியமான நுண்ணுயிர்களை சீராக வைத்திருக்கவும் இது உதவும்.
செரிமானத்தை சீராக்கும்: இது செரிமானத்திற்கான நொதிகளை அதிகப்படுத்த தூண்டும். இதனால் செரிமானம் இயல்பாக நடக்கும்ஸ, வயிற்ரிலும் பிரச்னை இருக்காது.
நச்சுக்களை வெளியேற்றும்: கஞ்சி இயற்கையாக உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் திறன்கொண்டது. இதை உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்: நன்கு நொதித்த கஞ்சியில் கேரட், பூண்டு மற்றும் மிளகை இடித்து சேர்த்து உண்டால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதில் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் நிச்சயம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.