CWC 5: குக் வித் கோமாளியில் ‘இந்த’ 8 பேர் கன்ஃபார்ம்! முழு லிஸ்டை பாருங்க..
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர் வசந்த், இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர், திவ்யா துரைசாமி. இவர், குக் வித் கோமாளி சீசன் 5ல் இருக்கிறாராம்.
தமிழ் பேசும் வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி. போன சீசனில் கலந்து கொண்ட பாண்டிச்சேரி ஆண்ட்ரியா போல, இவரையும் இந்த சீசனில் போட்டியாளராக இறக்க இருக்கின்றதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர், விடிவி கணேஷ். இவரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் சமையல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்.
பிரபல யூடியூபரான இர்ஃபான், தனது சமையல் கலையை காட்டுவதற்காக இப்போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகையும், நடன கலைஞருமான ஷாலின் ஜோயா குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
பிரபல டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவும் குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருந்தார்.