Covid relaxation: பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக…

Tue, 14 Sep 2021-9:40 am,

146 நாட்களுக்குப் பிறகு அரண்மனை திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பத்மநாபபுரம் அரண்மனை மட்டும் திறக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கேரளா அரசு இன்று முதல் அரண்மனையை திறக்க உத்தரவிட்டுள்ளது. கன்னியாக்குமரியில் உள்ள இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அரண்மனை கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. 

கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. 

 

இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இது கேரளாவின் தலைநகா் திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 

மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறியது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link