CSK 2025: ஓய்வு குறித்து தோனி சொன்ன முக்கிய தகவல்! பகிர்ந்த சிஎஸ்கே CEO!
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, பத்திரனா மற்றும் தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் ரூ.65 கோடியை இதற்காக செலவிட்டுள்ளது.
தற்போது சென்னை அணியிடம் ரூ. 55 கோடி மீதம் உள்ளது. இதனை கொண்டு மீதமுள்ள அணியை நவம்பர் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் மெகா ஏலத்தில் எடுக்க வேண்டும்.
வீரர்கள் தக்க வைப்பது குறித்து பேசிய சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன், ஒவ்வொரு வீரர்களுக்கும் மதிப்பு கொடுத்து, ஒரு சீரான அணியை உருவாக்க முயற்சி செய்கிறோம். இதுதான் சென்னை அணியின் வெற்றியின் ரகசியம். இதில் நாங்கள் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
ருதுராஜ், ஜடேஜா இருவரையும் தக்கவைப்பது குறித்து எந்தவித ஆலோசனையும் அணிக்குள் நடக்கவில்லை. அதேபோல், இளம் வீரர் சிவம் துபேயை தக்க வைத்துள்ளோம். பத்திரனவை வெளியில் விட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடினாலும், அவர் விரும்பும் வரை சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவார். அவருக்காக எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மெகா ஏலத்தில் தரமான இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிறந்த வீரர்களை வாங்க முயற்சி செய்வோம். தோனியிடம் இது குறித்தும் பேசி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.