நீடூழி வாழ எத்தனை விதமான ஆயுஷ் ஹோமங்கள்! யாருக்கு எந்த ஹோமம் செய்யலாம்?
ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று சொல்வார்கள். ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரது வாழ்க்கையில் 12 சாந்திகள் செய்து கொள்ளலாம். அதில் முதலாவதாக வருவது குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது செய்யும் ஆயுஷ் ஹோமம்
55 வயது ஆரம்பமாகும் போது பீமசாந்தி என்றால், 60 வயது ஆரம்பம் ஆகும் போது உக்ரசாந்தி.
61 வயது ஆரம்பமாகும் போது சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, 70 வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி
72 வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி
78 வயது ஆரம்பமாகும் போது வினய சாந்தி
80 வயது 8 மாதம் அல்லது 81 வயது முடிந்த பின் செய்வது சதாபிஷேகம் என்றால், 85 வருஷம் முதல் 90 வயதுக்குள் செய்வது ம்ருத்யுஞ்சய சாந்தி
100 வயது பூர்த்தியான பிறகு செய்யும் சாந்தி பூர்ணாபிஷேகம்
120 வயது பூர்த்தியான பிறகு செய்யும் சாந்தி பௌஷ்டிகம்