குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்
குரங்கு அம்மை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய பின்னர் தற்போது உலகின் மற்ற நாடுகளிலும் வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வெளியே உள்ள பல நாடுகளில் Mpox இன் புதிய மற்றும் கொடிய மாறுபாடான விகாரமான கிளேட் 1B (Clade IB) தொற்று பரவுகிறது. ஆப்பிரிக்காவின் பல நாடுகளைத் தவிர, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்வீடன், பாக்கிஸ்தான் மற்றும் இன்னும் பல நாடுகளில் குரங்கும் அம்மை பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
WHO இதை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. MPox முன்னர் மங்கிபாஸ் என அறியப்பட்டது. இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்ட 3-17 நாட்களுக்குள் தோன்றும். இந்த அறிகுறிகள், காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற பிரச்சனைகளுடன் தொடங்குகின்றன. இதன் பின்னர் சொறி, கொப்புளங்கள் வந்து, பெரிதாகி உலர்வதற்குள் 4 நிலைகளை இது கடக்கின்றது. அவை, மேக்யுலர், பபுலர், வெசிகுலர் மற்றும் பஸ்டுலர் ஆகியவை ஆகும். இந்த நோய் தானாகவே சரியாகிவிடும் என்றும், அறிகுறிகளை நிர்வகிக்க மட்டுமே மருந்துகள் தேவைப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் மருந்துகள் உட்கொள்ளாமல் இருந்தால், இவை தீவிர வடிவத்தை எடுக்கலாம், சில சந்தர்ப்பங்களில் இது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். WHO இன் கூற்றுப்படி, பச்சிளங் குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் எச்.ஐ.வி காரணமாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது மிகவும் கடுமையானதாக இருக்லாம். குரங்கு அம்மையின் சில பொதுவான அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
குரங்கு அம்மையில் கொப்புளங்கள் முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இடுப்பு, பிறப்புறுப்பு அல்லது குத பகுதிகளில் பரவக்கூடும். வாய், தொண்டை, ஆசனவாய், மலக்குடல், யோனி அல்லது கண்களில் இந்தப் புண்கள் வருவது பொதுவானது. சிலருக்கு மலக்குடலின் உள்ளே புரோக்டைடிஸ் அல்லது வீக்கம் ஏற்படலாம், இது கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால் பிறப்புறுப்புகளிலும் வீக்கம் ஏற்படும். இது சிறுநீர் கழிப்பதை கடினமாக்கும்.
MPOX தொற்றால் ஏற்படும் முக்கிய சிக்கல்களில் ஒன்று தோல் புண்களால் ஏற்படக்கூடிய தீவிர பாக்டீரியா தொற்று ஆகும். அல்சருடன் தோலில் புண்கள் அதிகமானால், அது தோல் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். இது நோயாளிகளின் இறப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
Encephalitis அதாவது மூளைக்காய்ச்சல் என்பது குரங்கு அம்மை வைரஸ் தொற்றின் ஆபத்தான அறிகுறியாகும். PVEM (பைகார்னாவைரஸ்-அசோசியேடட் என்செபலோமைலிடிஸ்) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இரண்டாவது வாரத்தில் நரம்பியல் அறிகுறிகளை உணர்கிறார்கள். மூளையழற்சி (மூளையின் வீக்கம்), மயிலிட்டிஸ் (முதுகுத் தண்டு அழற்சி) மற்றும் மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தைச் சுற்றியுள்ள புறணி அழற்சி) ஆகியவை இதில் அடங்கும்.
MPOX, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு நுரையீரல் நோயை ஏற்படுத்தும். இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி, கடுமையான அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் நிமோனியா ஆகியவை இதன் அறிகுறிகளாகும். தடுப்பூசி போடப்படாதவர்களும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும், எச்ஐவியுடன் வாழும் நோயாளிகளும் இந்த சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
MPOX இல், இரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறன் குறையக்கூடும். மயோர்கார்டிடிஸ் அல்லது இதய தசையின் வீக்கம் மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். இது மயோர்கார்டியம் அல்லது இதய தசைகளின் அடுக்கில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய செயலிழப்பு, விரிவாக்கப்பட்ட கார்டியோமயோபதி மற்றும் கடுமையான அரித்மியா ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
குரங்கு அம்மை வைரஸால் கான்ஜுன்க்டிவிடிஸ், பிளெஃபாரிடிஸ் மற்றும் ஃபோகல் கான்ஜுன்டிவல் புண்கள் போன்ற லேசான கண் பிரச்சனைகள் தாமாகவே தீரும். ஆனால் எப்போதாவது, மிக அரிதாக, இது கார்னியல் அல்சரேஷன், ஃபோட்டோஃபோபியா மற்றும் கெராடிடிஸ் ஆகிய தீவிர நிலைகளை ஏற்படுத்தும். இவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.