Toyota SUV Defect: டொயோட்டா காரில் குறைபாடு: நிறுவனம் வெளியிட்ட முக்கியமான தகவல்
இயந்திரக் கோளாறு காரணமாக கார்களை திரும்பப் பெறும் டொயோட்டா கிர்லோஸ்கர்!
முன் சீட் பெல்ட் ஷோல்டர் ஹைட் அட்ஜஸ்டர் பிளேட் அசெம்பிளியை சரிபார்க்க சில அர்பன் க்ரூஸர் ஹைரைடர் யூனிட்டுகளுக்கு தன்னார்வ ரீகால் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது
இந்த மாடலின் சுமார் 994 வாகனங்கள் பாதிக்கப்படலாம் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்திக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, திரும்பப்பெறுதல் தொடங்கப்படுவதாகவும், இலவசமாக மாற்றப்படும் என்றும் வாகன உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15,11,000 முதல் ரூ.18,99,000 வரை எனபது குறிப்பிடத்தக்கது.