இதயம் கண்களை பாதிக்கும் விட்டமின் ஈ குறைபாடு... தவிர்க்க செய்ய வேண்டியவை!
வைட்டமின் ஈ குறைபாடு: உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு வைட்டமின் ஈ மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். உடலில் குறைபாடு இருந்தால், பல வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தசை பலவீனம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் வைட்டமின் ஈ இல்லாததால், இதய ஆரோக்கியம் மற்றும் கண்பார்வை பாதிக்கப்படும்.
உடலில் வைட்டமின் ஈ குறைபாட்டினை போக்கு சேர்க்க வேண்டிய உணவு பொருட்களை அறிந்து கொள்ளலாம். ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 15 மில்லிகிராம் வைட்டமின் ஈ தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ப்ரோக்கோலி உடலின் நச்சுக்களை நீக்கும் உணவுகளில் ஒன்றாகும், இதன் உதவியுடன் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம். இது தவிர கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது.
கீரையிலும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் இரும்பு போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. வெறும் அரை கப் கீரை உங்கள் உடலுக்கு 16% வைட்டமின் ஈ வழங்க முடியும்.
ஒரு கையளவு பாதாம் பருப்பை உட்கொள்வது, உடலில் வைட்டமின் ஈ பற்றாக்குறையை போக்க உதவும். பாதாமை ஊறவைத்தோ அல்லது வறுத்தோ உட்கொள்ளலாம்.
அவகேடோ வைட்டமின் ஈ நிறைந்த உணவு. இது தவிர நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு வெண்ணெய் பழத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் 20% வைட்டமின் ஈ குறைபாட்டை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. காலை உணவுக்கு இது ஒரு சிறந்த வழி. ஒரு சில சூரியகாந்தி விதைகள் உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள வைட்டமின் ஈ குறைபாட்டை ஈடுசெய்யலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.