டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை: இது வீட்டு வைத்தியம் அல்லது கை வைத்தியம்
டெங்கு பாதிப்பு கவலையை எழுப்பி வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்ப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சத்தான உணவுகளை உட்கொள்வதைத் தவிர, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். டெங்குவை சமாளிக்க பல வீட்டு வைத்தியங்கள் மந்திரம் போல வேலை செய்கின்றன.
எவ்வளவு கசப்பாக இருந்தாலும், வேம்பில் உள்ள மருத்துவ குணங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் வேப்ப இலைகளை கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கொதித்த பிறகு, வேப்ப இலைகளை தண்ணீரில் இருந்து வடிகட்டவும். இந்த பானத்தை சிறிது சிறிதாக டீயுடன் கலந்து பருகலாம்.
பப்பாளி இலைகள் டெங்குவுக்கு வேப்பிலை அடிக்கும் மந்திரம் போல் வேலை செய்கிறது. பப்பாளி இலைகளில் 'மலேரியா எதிர்ப்பு' மற்றும் 'டெங்கு எதிர்ப்பு' பண்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பப்பாளி இலையின் சாறு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் அளவை அதிகரிக்கும். பப்பாளி இலைகளின் சாற்றை ஒரு கப் தண்ணீரில் தொடர்ந்து குடிப்பதால் டெங்கு பாதிப்பு விரைவில் குறையும்
பொடியாக நறுக்கிய பாகற்காயை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து அதை அப்படியே சாப்பிட வேண்டும்.
துளசி இலைகளை தேநீராக தயாரித்து பருகலாம். வழக்கமாக தயாரிக்கும் தேநீரிலும் துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி உடன் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. டெங்கு காய்ச்சலின் போது உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: இவை, பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படையில் கூறப்பட்ட ஆலோசனைகள் ஆகும். இந்த கூற்றுகளின் அறிவியல் அடிப்படைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.