ஒவ்வொரு மாதமும் ரூ. 2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால் லட்சங்கள் பெறலாம்

Sat, 18 Dec 2021-3:49 pm,

உண்மையில், தபால் அலுவலகம் தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit Scheme) உங்கள் குழந்தைகளின் கனவுகளுக்குப் புதிய சிறகுகளைத் தரும். இதன் காரணமாக, நீங்கள் பணப் பற்றாக்குறையை சந்திக்க மாட்டீர்கள் அல்லது அவர்களின் எதிர்காலத்தில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதில்லை. தேவைப்படும் நேரத்தில் இந்தத் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட பணத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். குழந்தையின் சார்பாக ஒரு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் தபால் அலுவலகத்தில் RD கணக்கைத் திறக்கலாம். இதில், முதலீடு 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இந்தத் திட்டத்திற்கான வட்டி ஆண்டுதோறும் 5.8 சதவீதம் மற்றும் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டுத்தொகை நடைபெறுகிறது.

தபால் நிலையத்தில் ஆர்.டி கணக்கு துவங்கினால், 5 வயது வரை, குழந்தையின் பெயரில் கணிசமான தொகை குவிந்து, அது அவரது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், உங்கள் குழந்தையின் பெயரில் எவ்வளவு தொகை இருக்கும் என்பதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம். குழந்தை பிறக்கும் போது அவருடைய ஆர்டி கணக்கைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் அவர் பெயரில் சுமார் 1.40 லட்சம் ரூபாய் இருக்கும்.

எந்தவொரு தபால் அலுவலகக் கிளைக்கும் சென்று குழந்தையின் பெயரில் தொடர் வைப்பு கணக்கைத் திறக்கலாம். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ரொக்கம் அல்லது காசோலை மூலம் கணக்கைத் திறக்கலாம்.

இது மட்டுமின்றி, முதிர்வுக்கு முன் பணம் தேவைப்பட்டால் கணக்கை மூடலாம். இருப்பினும், இதற்காக கணக்கில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகை வைத்திருப்பது அவசியம். அதாவது, வீட்டில் உள்ள உண்டியலில் பணத்தை வைப்பதை விட, குழந்தையின் பணத்தை இங்கு டெபாசிட் செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link