Maran: ’மாறன்’ திரைப்படத்தில் தனுஷின் மாஸ் புகைப்படங்கள்

Thu, 30 Dec 2021-4:25 pm,

கோலிவுட்டில் பிஸியான நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ், கார்த்திக்நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தனுஷ்-க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

தமிழில் மாளவிகா மோகனுக்கு இது 3வது திரைப்படமாகும். ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’பேட்ட’ மற்றும் இளையதளபதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் - கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாறன்’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் இந்த படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது. 

மாறன் திரைப்படத்தில் இருந்து இப்போது வெளியாகியிருக்கும் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இதில் இருவருமே மாஸாக இருக்கின்றனர்

இவர்களுடன் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், போஸ்வெங்கட் மற்றும் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

கார்த்திக் நரேன் ஏற்கனவே ’துருவங்கள் 16’ படத்தை இயக்கி, பெரும் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதற்கடுத்தபடியாக, அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா படத்தை இயக்கி, ரசிகர்களை கவர்ந்தார். மணிரத்னம் தயாரிப்பில் அக்னி என்ற குறும்படத்தையும் இயக்கி, பெரும் பாராட்டையும் பெற்றார் கார்த்திக் நரேன்.

படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link