நீரிழிவை கட்டுப்படுத்த.... இன்சுலின் உற்பத்தியை பெருக்கும் ஆற்றல் கொண்ட ‘சூப்பர்’ உணவுகள்
நாவல் பழம்: குறைந்த கிளைசெமிக் குறியீடு நாவல் பழத்தில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில், நாவல் பழங்கள் மட்டுமல்லாது அதன் விதைகள் மற்றும் இலைகள் என அனைத்தும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயம்: சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வெந்தயத்தில் உள்ள ட்ரைகோனெல்லின் இன்சுலினை சுரக்க செய்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வெண்டைக்காய்: நார்ச்சத்து உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியான வெண்டைக்காய், இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது.
இலவங்கப்பட்டை: இந்திய மசாலா வகையில் முக்கிய இடம் வகிக்கும் இலவங்கப்பட்டையை இன்சுலின் உற்பத்திக்கு உதவும். தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படும்.
பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும்.
மஞ்சள்: ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.