Diabetes: நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரஞ்சு ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அனுகூலமானதாக இருக்கும்.
ஆரஞ்சில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஒரு நடுத்தர அளவிலான ஆரஞ்சிலிருந்து சுமார் 5 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.
ஆரஞ்சு பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. பெரும்பாலான வல்லுநர்கள் நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் இரத்த சர்க்கரையை வேகமாக கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது. இதன் நுகர்வு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நோய் எதிர்பு சக்தி அதிகரிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது. ஆரஞ்சு பழத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலுக்கு 91 சதவீதம் வைட்டமின் சி கிடைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)