இரத்த சர்க்கரை அளவு அதிகமா இருக்கா? இந்த உணவுகளுக்கு `நோ` சொல்லுங்க
நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே நிறுத்தினால், நம் உடலை பல நோய்களில் இருந்து காப்பாற்றலாம். ஆனால் நீரிழிவு நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். நாம் நமது தினசரி உணவில் உட்கொள்ளும் சில உணவுகள் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கின்றன.
காபி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். காஃபினின் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வாழைப்பழங்கள், திராட்சைகள், செர்ரிகள் மற்றும் மாம்பழங்கள் போன்ற சில பழங்களில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. அவற்றை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்
இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இவற்றை உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.