நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!
நாக சாதுக்களின் வாழ்க்கை முறை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. ஆணோ பெண்ணோ, கட்டுப்பாட்டை கடந்தால் தண்டனையும் கடுமையானதாக இருக்கும்...
நாக சாதுக்களின் வாழ்க்கைமுறை மிகவும் கடினமானது என்பதும், அவர்களின் வாழ்க்கை எளிதாக வாழ்ந்து விடக்கூடியது அல்ல என்பதும் தெரியாது. ஆனால், நாகா சாதுக்கள் நிர்வாணமாக இருப்பதால் அவர்களைப் பார்த்தால் சாமானிய மக்கள் அச்சப்படுகின்றனர்
பிறக்கும்போதே யாரும் அகோரியாக இருப்பதில்லை. வாழ்க்கையை வாழும்போது நாகா சாதுவாக மாற வேண்டும் என நினைப்பவர்கள் கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
அதிலும், சாதாரணமான குடும்பத்தில் இருந்து வரும் பெண் ஒருவர், ஏதேனும் காரணத்திற்காக நாகா சாதுவாக வாழ முடிவெடுத்தால் அவர் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
நாக சாதுக்கள் என்பவர்கள் முற்றிலும் பற்றைத் துறந்த துறவிகள் ஆவார்கள். நாக சாது என்றாலே ஆடையையும் துறந்து நிர்வாணமாக இருக்க வேண்டும். ஆண்களைப் போலவே பெண் நாக சாதுக்களும் இருந்தாலும், அவர்களுக்கான விதிகள் சற்று வித்தியாசமானவை.
ஆண்களைப் போல் பெண் நாக சாதுக்கள் நிர்வாணமாக இருப்பதில்லை. அவர்கள் காவியுடை தரிப்பார்கள். ஆனால், அவர்கள் அணியும் துணி தைக்கப்படாது. ஒற்றை ஆடையை அணிந்து, சடாமுடியுடன், உடலில் விபூதி பஸ்மம் அணிய வேண்டும்
நாக சாதுவாக மாறுவதற்கு முன், இந்த பெண்கள் கடுமையான தவம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். குகைகள், காடுகள், மலைகள் போன்றவற்றில் வசித்துக் கொண்டு, கடவுள் பக்தியில் ஆழ்ந்து தியானம் செய்கிறார்கள்.
பெண் நாக சாதுக்கள் தீட்சை எடுப்பதற்கு முன் தலையை மொட்டையடிக்க வேண்டும். இந்த் நடைமுறையில் மன வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கலாம். உலகில் இருந்து விலகியே தவம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இந்த கடினமான பாதையில் தொடர முடியுமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்வதற்காக கடுமையான சோதனைகள் வைக்கப்படுகின்றன
ஒரு பெண் நாக சாதுவாக மாறுவதற்கு முன் இச்சைகளை துறக்க வேண்டும். 6 முதல் 12 ஆண்டுகள் வரை கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் குரு அவரை நாக சாதுவாக அனுமதிக்கிறார்.
பெண் நாக சாதுவாக மாறுவதற்கு முன், ஒரு சன்யாசினி உலகில் தனது உறவுகள் மற்றும் பந்தங்களை துறக்க வேண்டும். வாழ்ந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாகாசாதுவாக, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன் பிண்டதானம் செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பிறகு குடும்பத்தினர் பிண்டதானம் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது