Astro: ரவியோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்!
மேஷ ராசி: வருமானம் அதிகரிக்கும். உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் சனிபகவானின் அருளால் நல்ல லாபம் பெறுவார்கள். திருமண வாய்ப்பு கைகூடும். மனதி மகிழ்ச்சி நிலவும்.
சிம்ம ராசி: நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும்.
துலாம் ராசி: வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும்.
தனுசு ராசி: தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
கும்ப ராசி: முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.