சென்னையில் விமர்சையாக நடைபெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்!
ஆதிக் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் பிரபுதேவாவை வைத்து பகீரா, சிம்புவை வைத்து AAA போன்ற படத்தை இயக்கி உள்ளார்.
சென்னையில் இன்று ஐஸ்வர்யா பிரபுவும், ஆதிக் ரவிச்சந்திரனும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யா பிரபு நடிகர் பிரபுவின் மூத்த மகள் மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரி ஆவார்.
இந்த புதுமண ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்க தொடங்கினர். ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். 2008-ம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயருடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால், அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.