வரும் ஜனவரி 1 முதல் கட்டாயம்.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Sat, 28 Dec 2024-10:16 am,

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் (1.1.2025) புதிய மாற்றம் சார்ந்து மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய மாற்றம் எந்த வகை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொருந்தும்? மற்றும் எந்த வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்? என்ன மாதிரியான மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது? போன்ற விவரங்களை பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய அலுவல் சார்ந்து பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வந்த களஞ்சியம் மொபைல் ஆப் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நலனிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களஞ்சியம் என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது பெரிதும் வரவேற்பை பெற்றது. முதலில் களஞ்சியம் மொபைல் ஆப் சோதனை அடிப்படையில் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. 

களஞ்சியம் மொபைல் ஆப் மூலமாக அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு, சம்பளம்,  ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற விஷயங்களை எளிதாக மேற்கொள்ள முடிந்தது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்பு களஞ்சியம் மொபைல் ஆப் முழு வீச்சில் தயாராகி இருக்கிறது. 

களஞ்சியம் மொபைல் ஆப்பி‌ல் இருந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் களஞ்சியம் மொபைல் ஆப் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

அதாவது களஞ்சியம் மொபைல் ஆப் வரும் ஜனவரி 1, 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இதில் உள்ள அனைத்து வசதியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் குறிப்பாக பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான் (Pay Drawn?), பர்டிகுலர்ஸ் (Particulars) போன்ற தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர தற்செயல் விடிப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்கு களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

பண்டிகை காலத்தில் முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றுக்கும் களஞ்சியம் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம். இது சார்ந்த செயல்முறை ஆணைகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும் வருடாந்தர நேர்காணலை இந்த செயலின் மூலம் ஓய்வூதியர்கள் மேற்கொள்ளலாம். மேலும் பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான் (Pay Drawn?), பர்டிகுலர்ஸ் (Particulars), ஃபார்ம் 1 ஜி‌ (Form 1G) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

எனவே களஞ்சியம் மொபைல் ஆப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது சார்ந்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த களஞ்சியம் மொபைல் ஆப் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை-01ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link