மழை கால நோய்கள் அண்டாமல் இருக்க டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ காய்கறிகள்!
மழைக்காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவது நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. மழைக்காலத்தில் உடலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பாகற்காய் சாப்பிடுவது மழைக்காலத்தில் அதிக பலன் தரும். வைட்டமின் சி நிறைந்த பாகற்காய் ஒவ்வொரு பருவத்திலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது. இதன் ஆன்டிவைரல் பண்புகள் மழையால் பரவும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகளை மழைக்காலத்தில் சாப்பிடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது. மழைக்காலத்தில் உடலில் வளரும் பாக்டீரியாக்களை உருளைக் கிழங்கு அழித்துவிடும். இந்த பருவத்தில் கிழங்குகளை தயக்கமின்றி உட்கொள்ளலாம்.
மழைக்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். மேலும், வெண்டைக்காய் உட்கொள்வதால் கண்கள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளும் குணமாகும். எலும்புகள் வலுவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதற்கு பொறுபேற்காது