உடல் எடை தொடர்ந்து அதிகரித்தால் இந்த பரிசோதனைகள் அவசியம்
பிசிஓஎஸ் பிரச்சனையும் பெரும்பாலான மக்களில் எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. மோசமான வாழ்க்கை முறையால் பெரும்பாலான மக்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஆகையால், உங்கள் எடை அல்லது உடல் பருமன் அதிகரித்தால், கண்டிப்பாக பிசிஓஎஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் பருமன் பல நோய்களை உண்டாக்கும்.
தொடர்ந்து எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடல் எடை அதிகரிப்பதோடு, அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் உடனடியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
உடல் எடை அதிகரித்தால் தைராய்டு பரிசோதனை செய்துகொள்வதும் அவசியமாகும். ஏனெனில் தைராய்டு காரணமாக உங்கள் எடை அதிகரித்திருக்கக்கூடும். எடை அதிகரிப்புடன் முடி உதிர்தல் மற்றும் நகம் உடைதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக தைராய்டு செயல்பாடு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கெட்ட கொழுப்பின் அளவை சரிபார்க்க லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை அவசியம். உடல் பருமன் காரணமாக பெரும்பாலானோரின் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த சோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)